சென்னை வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் குமார் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருத்துகுமார் மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, விநாயகம், அப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த 17ஆம் தேதி ஊர் திருவிழாவின்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் காலை அபினேஷ் குமாரை நான்கு பேரும் காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அபினேஷ் குமார் கொடுத்த புகாரின் படி பாலாஜி என்பவரை கைது செய்தனர்