விருதுநகர் டாக்டர் லைசாண்டர் கலையரங்கில் நகராட்சி 15 மற்றும் 29 வது வார்டு பகுதி மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது முகாமில் அரசின் 15 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு ஆன்லைனில் பதிவு செய்தனர் இன்று 236 மனுக்கள் பெறப்பட்டு 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன . முகாமில் எம்எல்ஏ சீனிவாசன் நகர் மன்ற தலைவர் மாதவன் ஆணையாளர் சுகந்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.