கொளத்தூர் காவல் மாவட்டம் புழல் சரகம் எம்3 காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து காவலர் தினத்தை முன்னிட்டு போதை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் 1500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்