வாணியம்பாடி அடுத்த ஆலாங்காயம் அருகே படகுப்பம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 13.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இன்று காலை வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.