தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியில் இருந்து புதுரோடு செல்லாமல் எட்டையாபுரம் சாலை வழியாக ஒரு வழிப்பாதையில் லாரி ஒன்று வந்தது இதனை தடுத்து நிறுத்தி போக்குவரத்து போலீசார் அருண் விக்னேஷ் விசாரணை நடத்தினார் இதில் லாரியில் அனுமதி இல்லாமல் சரல் மண் அள்ளி வந்தது தெரிய வந்தது தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் லாரி ஓட்டுநர் லாரி உரிமையாளர் மற்றும் 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்