திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் பகுதியில் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் 95 சென்ட் நிலம் 2004ஆம் குத்தகை முடிந்தும் தனிநபர்களின் அனுபவத்தில் இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அறநிலையத்துறைக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து குத்தகை காலம் முடிந்து 20 ஆண்டுகளாகியும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்காமல் இருந்து 24கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தினை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.