திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவில் மேல அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் என்கிற அன்பு. இவர் கடன் வாங்கி பிளக்ஸ் பேனர் அச்சிடும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதால் இவர் குடிக்கு அடிமையானார். மேலும் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.