திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணியங்குறிச்சி களத்து வீட்டில் வசிப்பவர் அமர்ஜோதி (வயது 53) விவசாயி .நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் படுக்க சென்ற நிலையில் வீட்டின் அருகே உள்ள வாழைத் தோட்டம் வழியாக மங்கி குல்லா, கையுறை அணிந்தும் சிறிய கத்தி,வால் மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டி போட்டு பணம் நகைகளை திருடி சென்றனர்.