தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சிவக்குமார் உடன் இருந்தனர்.