ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் .இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 351 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது