இளையான்குடி அருகே மேலாயூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் அற்புதம் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (மார்ச் 7ம் தேதி வியாழக்கிழமை) நடைபெற்றது. தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.