திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டுக்கல் செசிலியாஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ பெ செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், திட்ட அலுவலர் திலகவதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.