ஒட்டன்சத்திரம் அருகே இருள குடும்பன்பட்டியை சேர்ந்த 75 வயதான மூதாட்டி அழகாத்தாள் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி உதவி கேட்பது போல் நடித்துள்ளார். பேசிக் கொண்டிருக்கும் போதே மூதாட்டியின் கழுத்தில் அணிந்து இருந்த நாலே முக்கால் பவுன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார், ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வாகன தணிக்கையின் போது நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நகையை மீட்டனர்