திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் நவநீதம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்திற்கு போக போதிய சாலை வசதி இல்லை மற்றும் யாராவது இறந்தால் அங்குள்ள ஏரியில் பிணங்களை புதைப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. தனியாக சுடுகாடு வசதி வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.