திருப்பத்தூரில் சாலைகளில் தாழ்வாக தொங்கும் கேபிள் வயர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன. புதுத்தெரு, சிவகங்கைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இவை விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. மின்கம்பங்கள், மரங்களில் கட்டப்பட்ட வயர்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆபத்தில் உள்ளனர். தனிக்கம்பங்கள் நட்டு, வயர்களை பாதுகாப்பாக நிலைநிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.