காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் வாகன நிறுத்தும் இடத்தில் அங்கு காவலராக பணிபுரியும் 54 வயதுடைய செல்வம் என்பவர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் வந்து போதை பொருட்கள் பயன்படுத்த முயன்றுள்ளனர் மேலும் அவர்கள் ஏற்கனவே போதையில் இருந்துள்ளனர் இதனை கண்ட செல்வம் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மூவரும் சேர்ந்து செல்வத்தை மிக கொடூரமாக தாக்கியுள்ளனர்.