கோவில்பட்டி புதுகிராம் பகுதியில் உள்ள ஒரு இட்லி கடையில் சிலிண்டரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ பிடித்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை போராட்டத்திற்கு பின்னர் கட்டுப்படுத்தினர் தொடர்ந்து சிலிண்டரில் ஏற்பட்ட தீ மூலமாக வெளிப்பகுதியில் வைத்திருந்த மர ஸ்டாண்டு மற்றும் சேர்கள் தீயில் கருகி சேதமடைந்தது . இந்த விபத்து தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்