கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகீரனூர் கிராமத்தில், குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாக அலிமுல்லா என்ற இளைஞர் சரமாரியாகத் தாக்கப்பட்டார். அவரது வீட்டருகே வசிக்கும் லியாகத் அலி மற்றும் அவரது மனைவி ரஹிமா ஆகியோர், தங்கள் மகளின் திருமணத்தை நிறுத்தியதற்கு அலிமுல்லாவே காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினர்.