திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புனித மரியன்னை தொடக்கப் பள்ளி, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புனித மரியன்னை பள்ளி அதிபர் மரிவளன், மேற்கு ரோடு சங்க தலைவர் புருஷோத்தமன் செயலாளர் சந்திரசேகரன் முகாமை துவக்கி வைத்தனர்.