திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்பட்டியில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில் இருவேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஒரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பினர் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்