கோவில்பட்டி அருகே உள்ள விஸ்வநாததாஸ் காலனி பகுதியில் பொதுப் பாதையை மரித்து தனிநபர் கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது இந்த கட்டிடம் கட்டுமான பணிகளை நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் கோவில்பட்டி லிங்கம்பட்டி சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த நாலாட்டின் புத்தூர் காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து கலைந்து சென்றனர்.