பேராம்பட்டு அடுத்த சென்னூர் பார்டர், காமாட்சி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அதே பகுதியைச் பிரதாப் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் விஜய் ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பேராம்பட்டு பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பேராம்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு எதிர் திசையில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு வந்த அப்பி ஆட்டோ இவர்கள் மீது அதி வேகமாக மோதி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.