வாணியம்பாடி பேருந்து நிலையம், பஜார்சாலை, மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் மேம்பாலம், கச்சேரி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு வருகின்றனர். அதில் செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த செய்தி இன்று மாலை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.