செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கல்பாக்கத்தில் நடைபெற்றது, கல்பாக்கம் காவல் நிலையம் அருகே துவங்கிய இந்த பேரணியில் மாணவர்கள் போதைக்கு எதிராக முழக்கமிட்டும் கையில் பதாகைகளை ஏந்தியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை சென்றடைந்தது,