நிலக்கோட்டை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையை யொட்டி அத்தப்பூ கோலமிடும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பண்டிகைக்காக நாள்தோறும் நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து கேரள மாநிலத்திற்கு மலர் ஏற்றுமதியாளர்கள் பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அத்தப்பூ கோலம் போடுவதற்கு பயன்படும் செண்டுமல்லி, செவ்வந்தி, வாடாமல்லி, பட்டன் ரோஜா பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.