ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் இன்று காலை இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார். அதேபோல் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் இன்று நண்பகல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.