ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ராணிப்பேட்டை பாலாற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்