தேனி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில், மாவட்ட ஒருங்கிணைப் பாளர் தாஜுதீன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்