திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டவர்கோவில் சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். அப்போது கண்ணுடையான்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த காட்டுப்பட்டி கிராம மக்கள் நியாய விலை கடை கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதனை எம்எல்ஏ உடனடியாக நிறைவேற்றி உள்ளார்.