விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பாண்டி ரோடு அம்பேத்கர் சிலை அருகே அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மரக்காணம் அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கினார், நகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.