சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இன்று மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கிய போது மாடு ஒன்று ரயிலில் சிக்கியதால் ரயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது.