வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் இம்ரான்பாஷா வீட்டின் அருகே நான்கு பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது மது போதையில் நான்கு பேருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி உள்ளது. அதனை இம்ரான் பாஷா தடுக்க சென்றபோது இம்ரான் பாஷாவை மது போதையில் இருந்த நபர் கத்தியால் குத்தியதில் இம்ரான்பாஷா படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.