ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியில் தனியார் தையல் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது கடந்த மூன்று மாதங்களாக நிறுவனம் போதிய அளவு ஆர்டர்கள் இல்லாததால் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாக கூறிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறுவனத்தை மூடியுள்ளார் இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை