விருதுநகர் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் 56வது ஆண்டு ஆவணி பெருந்திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கொடிமரத்திற்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து கொடிமரம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.