தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அருவிகளில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் அருகில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது