திருப்பத்தூர் நகராட்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட எஸ்பி சியாமளா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஒவ்வொரு காவலர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என அறிவுரை வழங்கினார்.