சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிறியூர் பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு மதகு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விதிமுறைக்கு முரணாக நாட்டார் கால்வாயிலிருந்து ஆற்று மணல் எடுத்து பயன்படுத்தியதோடு, இரவு நேரங்களில் லாரிகளின் மூலம் கடத்திச் சென்றதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.