சக்தி பீடங்களில் முதன்மையானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ திருவிழா கடந்த ஞாயிற்று கிழமை முதல் தொடங்கி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவத்தின் இன்று காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளை நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ, செண்பக பூ,பஞ்ச வர்ண மலர் மாலைகளும், குருவிவேர் மாலையும் ஏலக்காய் மாலையும் சூட்டி லட்சுமி,சரஸ்வதி, தேவியருடன் காமாட்