தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு இன்று திரண்டு வந்த வண்ணம் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்