காஞ்சிபுரத்தில் உள்ள ஓரிக்கை டாஸ்மாக் குடோன் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, காலி பாட்டில்களை மதுபானப் பிரியர்களிடம் இருந்து வாங்க மாட்டோம் என முழக்கமிட்டுள்ளனர். திடீரென அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், தங்களது பணிச்சுமையையும், சிரமத்தையும் அதிகரிக்கும் என்று பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் இந்த எதிர்ப்பு, இத்திட்டத்தின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது