திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் கோவையில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். தாராபுரம் சாலையில் கந்தப்பகவுண்டன் வலசு என்ற இடத்தில் கார் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் மற்றும் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.