ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம், ஆற்காடு அடுத்த எசைனூர் , வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.