திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் T.புதுப்பட்டி வடக்கு தோட்டத்தில் விவசாயி செந்தில்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் தோட்டத்தில் இருந்த ஆடுகளையும், கோழிகளையும் கடித்ததால் ஆடுகளும் கோழிகளும் உயிரிழந்து விட்டது. விவசாயம் மற்றும் ஆடு கோழி வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.