அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் , வெள்ளி மிலாடி நபி விடுமுறை , சனி, ஞாயிறு மற்றும் ஓனம் பண்டிகை கேரள பக்தர்கள் வருகை என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மின் இழுவை ரயில் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று மாலை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மலைகோவில் செல்ல மாலை 6 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.