தருமபுரி மாவட்டம் பாப்பிரட்டிப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் மகன் ஈஸ்வரன். இவர் வேலூர் மாவட்டம் அகரம் பகுதியில் உள்ள டாக்டர்.எம். ஜி. ஆர். அரசு கலைகல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் உள்ள அரசினர் சமூக நீதி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 26 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விடுதியின் அருகில் உள்ள குமரன் கிளினிக்யில் மருத்துவம் பார்த்ததால் மயக்கமடைந்து மற்றொரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் ஆபத்தான நிலை சிகிச்சை பெற்று வரும் நிலையில் விசிகவினர் நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார்