மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், இன்று அம்மன் திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சியையொட்டி அம்மன் திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக மயானத்திற்கு சென்றது. அங்கு பாவாடைராயன் மற்றும் பூஞ்சோலை வல்லாளராயன் கோட்டையை அழிக்கும் நிகழ்ச்சிகள் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.