தியாகி இமானுவேல் சேகரனாரர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி சமயங்களை கடந்து இவருக்கு புகழஞ்சலி செலுத்துவது மட்டுமின்றி பல்வேறு மாநில மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இவருக்கு பால்குடம் மற்றும் பாரியெடுத்து கடவுளாகவே பாவித்து அவரது நினைவிடத்தில் சமர்ப்பித்து வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று நடைபெற்று வருகின்ற 68 ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை விழாவில் நினைவிடத்திற்கு வந்த பாதிரியார் கையில் பைபிளோடு ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது