கிணத்துக்கிடவு அருகே உள்ள அரசம்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.