நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பாப்பாக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 10 மணி அளவில் சென்றது பேருந்தை ஓட்டுநர் பெரிய துறை என்பவர் ஓட்டி சென்றார் நடுக்கல்லூர் அருகே சென்றபோது திடீரென பேருந்து டயர் வெடித்தது எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் டிராக்டர் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது மேலும் அரசு பேருந்து முன் பக்கம் முழுவதும் சேதமானது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் டிராக்டர் ஓட்டுநர் உட்பட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்