தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு கடலானது சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் கடலில் சற்று பயந்தவாரு புனித நீராடினர்.